குடும்ப, குடும்பவழி உறுப்பினர் காப்பு மந்திரம்.
உலகளாவிய தமிழ்உறவுகளின்,
1.உடல் நலத்திற்கும் 2.மன மகிழ்ச்சிக்கும் 3.பொருளாதார முன்னேற்றத்திற்கும் 4.பயணஉதவி வண்டிகளில் பாதுகாப்பிற்கும் 5.தொடர்புகளின் ஒத்துழைப்பிற்கும்,
தமிழ்முன்னோர் நமக்கு வகுத்தளித்துச் சென்றுள்ள,
1.குறிஞ்சிநிலக் கடவுள்கூறு தெய்வம் சேயோனையும் 2.முல்லைநில இறைக்கூறு தெய்வம் மாயோனையும் 3.மருதநில இறைக்கூறு தெய்வம் மன்னனையும் 4.பாலைநில இறைக்கூறு தெய்வம் கொற்றவையையும் 5.நெய்தல்நில இறைக்கூறு தெய்வம் வருணனையும், வேண்டுவதற்கான முன்னெடுப்பே இந்த ஐந்திணைக் கோயில்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்குமான காப்பு மந்திரம் உருவாக்கிக்
கொள்ளவும், உங்கள் காப்புமந்திரத்தில் நீங்கள் கேட்ட முன்னேற்றத்தை உறுதியாக பெறுவதற்கு,
கடவுளிடம் பதிவிடவும் ஐந்திணைக் கோயில் வாய்ப்பு வழங்குகிறது.
உங்களுக்கும் உங்கள்
குடும்பத்திற்குமான காப்பு மந்திரம் உருவாக்கி, ஐந்திணைக் கோயிலில் உங்களை ஓர் அருட்பேறாளராக
இணைத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் உருவாக்கிய காப்பு மந்திரத்தைக்
கடவுளிடம் பதிவிடலாம்.
குடும்ப, குடும்பவழி உறுப்பினர் காப்பு மந்திரம்.
இயல்அறிவில் (Science)
பாதுகாப்பு நடவடிக்கை (Safety precautions) போல, மருத்துவத்தில் தடுப்பு ஊசி போல, நமது
வாழ்க்கை இயக்கத்தில் காப்புமந்திரம் கட்டி அன்றாடம் ஓதி இருக்க வேண்டியது கட்டாயம்
என்கிறது இயல்கணக்கில் தமிழ்முன்னோர் முன்னெடுத்த மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரம்.
தமிழ்மக்கள் அனைவரும் அன்றாடம் ஓதிவரும் வகைக்கு உங்கள் குடும்பத்தார் அனைவரின் பெயர்களோடு, சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம். கட்டி அளிப்பதற்கானது இந்தக் கட்டுரை.
தமிழ்முன்னோர் நிறுவிய இரண்டாவது முன்னேற்றக்கலை கணியம், தமிழ்முன்னோர் நிறுவிய மூன்றாவது முன்னேற்றக்கலை மந்திரம் அடிப்படையில் பேசினால்-
நம் வாழ்க்கை இயக்கத்தில்
நம்மோடு இணைந்து, நம்மை வளர்த்துக் கொண்டே இருக்கிற ஆற்றல்கள்: நிலம், நீர், தீ, காற்று,
என்கிற நான்கு ஆகும்.
அந்த நான்கையும் எவ்வளவு வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள, நம்கேட்ட வகைக்கு கொடுத்திருக்க, நம்மை முயக்கும் ஐந்தாவது ஆற்றல் விசும்பு என்கிற கடவுள் ஆகும்.
ஒரு மனிதனின் அடிப்படைத் தேவையாக இருக்கிற அந்த ஐந்திர ஆற்றலும் நமக்குக் கிடைத்து நாம் பேரளவாகத் தொடர்ந்து வளர்ந்திட உருவாக்கப்பட்டது காப்பு மந்திரம்.
இதுவரை உங்களுக்கு கிடைத்திருந்தது அனைத்தும் நீங்கள் கடவுளிடம் கேட்டது மட்டுமே என்பது மந்திரம் நிறுவியுள்ள செய்தியாகும்.
ஒவ்வொரு தற்பரை நேரமும்- செயலாலும், எண்ணத்தாலும், தமிழாலும் (எண்ணமொழி அல்லது தாய்மொழி அல்லது இயல்மொழி) கடவுளிடம் கேட்டிருப்பதே மந்திரம் ஆகும்.
இந்த மூன்றுவகையாக கடவுளிடம் பதிவு செய்யப்படுகிற நம்மந்திர இயக்கம், கடவுளில் பதிவாக, அந்த இயக்கத்தால் இயக்கம் பெற்ற கடவுள் நம்மை முயக்குகிறது.
நாம் அன்றாடம்
ஆற்றிவருகிற கடமைகள் செயல்பதிவு ஆகும். ஒவ்வொரு தற்பரை நேரமும் நம் மனத்தில் ஓடிக்
கொண்டிருக்கிற சிந்தனை எண்ணப்பதிவு ஆகும். உறுதியான கடவுள் கேட்பாக அமைகிற நம்முடைய
தெளிவான பதிவு- தமிழின் மூலமே கடவுளில் பதிவாகிறது.
அந்தத் தமிழ் மூலமாகக்
கட்டமைத்த, இந்தக் காப்பு மந்திரத்தை அன்றாடம் ஓதிவாருங்கள் என்று அறிவுறுத்தி
மகிழ்கிறோம்.
தற்போதைக்கு- தமிழ்க்
குடும்பங்கள் அனைத்திலும் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், பொங்கல்விழாவுக்கு முந்தைய நாளில்
காப்புக்கட்டு என்ற தலைப்பில் இந்த காப்பு மந்திரம் கடமை ஆற்றுதலாக முன்னெடுக்கப்பட்டு
வருகிறது.
உறுதியான கடவுள்
கேட்பாக அமைகிற, நாம் நம்தமிழின் மூலம் கட்டமைக்கிற, நம்முடைய
தெளிவான பதிவுக்கான, மாதிரி குடும்ப, குடும்பவழி உறுப்பினர் காப்பு மந்திரம்.
கடவுளே!
விசும்புதெய்வமே!
எனக்கும்
என் மனைவி குமுதாவிற்கும்
என் மகன் செழியனுக்கும்
என் மருமகள் ஓவியாவிற்கும்
என் பேரப் பிள்ளைகள் நிலாவிற்கும் பெருவழுதிக்கும்
என் மகள் எழல்மதிக்கும்
என் மருமகன் ஆதவனுக்கும்
என் பேரப்பிள்ளைகள் புதியனுக்கும் வெண்பாவிற்கும்
குறிஞ்சித்திணை கடவுள்கூறுதெய்வம்
சேயோனின் மாட்சிக்குரிய
உடல் நலத்தையும்
முல்லைத்திணை இறைக்கூறுதெய்வம்
மாயோனின் மாட்சிக்குரிய
மன மகிழ்ச்சியையும்
மருதத்திணை இறைக்கூறுதெய்வம்
மன்னனின் மாட்சிக்குரிய
பொருளாதார முன்னேற்றத்தையும்
பாலைத்திணை இறைக்கூறுதெய்வம்
கொற்றவையின் மாட்சிக்குரிய
பயண உதவி வண்டிகளில் பாதுகாப்பையும்
நெய்தல்திணை இறைக்கூறுதெய்வம்
வருணனின் மாட்சிக்குரிய
தொடர்புகளின் ஒத்துழைப்பையும்
வழங்கி ஆவன செய்ய வேண்டுகிறேன்.
கடவுளே!
விசும்புதெய்வமே!
அருள் செய்க.
இந்த மாதிரிமந்திரக்காப்பில்,
உறவு முறைகளையும் உறவுகளின் பெயரையும் உங்களுக்கானவைகளாக மாற்றி, உங்கள் குடும்ப, குடும்பவழி
உறுப்பினர்களுக்கு மட்டுமான மந்திரமாகக் கட்டிக்கொண்டுஅன்றாடம் ஓதி வாருங்கள்.
நீங்கள் திருமணம்
ஆனவர் என்றால்- நீங்கள், உங்கள் தலைவி, உங்கள் பிள்ளைகள், உங்கள் மருமக்கள், உங்கள்
பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு நீங்கள் மந்திரக்காப்பு கட்டலாம்.
திருமணம் ஆன உங்களுக்கு, குடும்ப, குடும்பவழி உறுப்பினர் அனைவரின் பெயர்களோடு, நாங்கள், சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம் கட்டி அனுப்ப, இணைப்பில் சென்று, கிடைக்கும் படிவத்தை தமிழில் நிறைவு செய்து அனுப்பவும்.
நீங்கள் திருமணம்
ஆகாதவர் எனில்- நீங்கள், உங்கள் தாய், உங்கள் தந்தை, உங்கள் அக்கா, உங்கள் தங்கை, உங்கள்
அண்ணன் உங்கள் தம்பி, அண்ணன் அக்காவின் துணைகள் மற்றும் பிள்ளைகள் ஆகியோருக்கு நீங்கள்
மந்திரக்காப்பு கட்டலாம்.
திருமணம் ஆகாத உங்களுக்கு, குடும்ப, குடும்பவழி உறுப்பினர் அனைவரின் பெயர்களோடு, நாங்கள், சிறப்பு குடும்பக் காப்பு மந்திரம் கட்டி அனுப்ப, இணைப்பில் சென்று, கிடைக்கும் படிவத்தை தமிழில் நிறைவு செய்து அனுப்பவும்.
ஐந்திணைக்கோயில் அருட்பேறுக்கு, kumarinadanr-1@oksbi என்கிற ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுக அடையாளத்திற்கு (UPI ID) அல்லது 9500612859 செல்பேசி எண்ணுக்கு ரூபாய் இருநூற்று முப்பது நன்கொடை அனுப்பலாம். இந்த 230ல், நீங்கள் இரண்டு. நீங்கள் அடையப் போகும் பேறு மூன்று. அந்த பேறை அருள் ஆற்றலாக மேம்படுத்தும் ஐந்திணைக் கோயில் சுழியம். என்கிற அருட்கணக்கு (கணியம்) மந்திரமாக்கப்பட்டுள்ளது.
நாங்கள் உங்களுக்குக் கட்டி அனுப்பும் சிறப்புக் காப்பு மந்திரம் இந்தப்படத்தில் உள்ளது போல இருக்கும். அதை நகல் எடுத்து வைத்துக்கொண்டு அன்றாடம் குறைந்தது இரண்டு முறையோ, மனம் நிறைவு அடையும் வகைக்கு எத்தனை முறை வேண்டுமானலும் ஓதிபயன் பெறலாம்.
இது உங்கள் வாழ்க்கை
முன்னேற்றத்திற்கான, ஐந்திணைக் கோயில் வடிவமைத்துக் கொண்டாடியிருக்கும் முழுமையான மந்திரம்
ஆகும்.
இந்தக் காப்பு மந்திரத்தில் முதலாவதாக நாம் கேட்கிற உடல் நலத்தில்- கடவுள் என்கிற விசும்பு நமக்கு பாடாற்ற- உடல் நலத்திற்கு- உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும் ஆராய்ந்து, நோய்க்குறிகளை வெளிப்படுத்தி, மருத்துவத்திற்கு வழிநடத்தி, மருந்தும் உருவாக்கி, கடவுள் தன்வளத்தை நேரடியாக நமக்குத் தர- கடவுளை இந்த மந்திரம் இயக்குகிறது.
காப்பு மந்திரத்தை நாம் ஓதும் ஒவ்வொருமுறைக்கும் கடவுளின் முயக்க வேகம் கூடுகிறது. இதனால், கடவுள் நாம் கேட்ட உடல்நலக் கட்டுமானங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நம்மை நெருங்கி வருகிறது.
இந்தக் காப்பு மந்திரத்தில் இரண்டாவதாக நாம் கேட்கிற மன மகிழ்ச்சியில்- நிலம் நமக்கு பாடாற்ற- நம் மன மகிழ்ச்சிக்கு- குடில், வீடு, மனை, நல்ல தூக்கம் போன்ற நிலவளத்தை கடவுள் நமக்கு ஒருங்கிணைத்துத் தர- கடவுளை இந்த மந்திரம் இயக்குகிறது.
காப்பு மந்திரத்தை நாம் ஓதும் ஒவ்வொருமுறைக்கும் கடவுளின் முயக்க வேகம் கூடுகிறது. இதனால், கடவுள் நாம் கேட்ட நிலத்தை ஒருங்கிணைத்துக் கொண்டே நம்மை நெருங்கி வருகிறது.
இந்தக் காப்பு மந்திரத்தில மூன்றாவதாக நாம் கேட்கிற பொருளாதார முன்னேற்றத்தில்- நீர்ஆற்றல் நமக்கு பாடாற்ற- நாம் கேட்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கு- நீர்வளம் சார்ந்த குட்டை, குளம், ஏரி, ஆறு, அணைக்கட்டு வயல் வேளாண்மை என அனைத்து நீர்வளக் கட்டுமானங்களையும் கடவுள் நமக்கு ஒருங்கிணைத்துத்தர- கடவுளை இந்த மந்திரம் இயக்குகிறது.
காப்பு மந்திரத்தை நாம் ஓதும் ஒவ்வொருமுறைக்கும் கடவுளின் முயக்க வேகம் கூடுகிறது. இதனால், கடவுள் நாம் கேட்ட நீர்வளக் கட்டுமானங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நம்மை நெருங்கி வருகிறது.
இந்தக் காப்பு மந்திரத்தில் நான்காவதாக நாம் கேட்கிற பயண உதவி வண்டிகளில் பாதுகாப்பில்- தீஆற்றல் நமக்கு பாடாற்ற- நாம் கேட்கும் பயண உதவி வண்டிகளில் பாதுகாப்பிற்கு- நடை பயணம், சாலை, ஊர்திகள், போன்ற வெப்பவளம் சார்ந்த அனைத்துக் கட்டுமானங்களையும் கடவுள் நமக்கு ஒருங்கிணைத்துத்தர- கடவுளை இந்த மந்திரம் இயக்குகிறது.
காப்பு மந்திரத்தை நாம் ஓதும் ஒவ்வொருமுறைக்கும் கடவுளின் முயக்க வேகம் கூடுகிறது. இதனால், கடவுள் நாம் கேட்ட வெப்பவளக் கட்டுமானங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நம்மை நெருங்கி வருகிறது.
இந்தக் காப்பு மந்திரத்தில் ஐந்தாவதாக நாம் கேட்கிற தொடர்புகளின் ஒத்துழைப்பில்- தொடர்பு ஒருங்கிணைப்புப் பேராற்றலான காற்றுவளம் நமக்கு பாடாற்ற- நாம் கேட்கிற தொடர்புகளின் ஒத்துழைப்பிற்கு- அறிவு, மொழி, கல்வி, கலை, வேலையாட்கள், நுகர்வோர்கள், கொண்டாடிகள் (ரசிகர்கள்), தொண்டர்கள் என்கிற தொடர்புகளின் வளமான காற்றுவளம் சார்ந்த அனைத்துக் கட்டுமானங்களையும் கடவுள் நமக்கு ஒருங்கிணைத்துத்தர- கடவுளை இந்த மந்திரம் இயக்குகிறது.
காப்பு மந்திரத்தை நாம் ஓதும் ஒவ்வொருமுறைக்கும் கடவுளின் முயக்க வேகம் கூடுகிறது. இதனால், கடவுள் நாம் கேட்ட காற்றுவளக் கட்டுமானங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நம்மை நெருங்கி வருகிறது.
உங்கள் வங்கிக் கணக்கில் பணம் குவிந்து கொண்டே இருப்பது மாதிரி-
காப்பு மந்திரத்தை
நீங்கள் ஓதுகிற ஒவ்வொரு எண்ணிக்கையும் ஐந்திர அற்றல் சேமிப்பின் குவிப்பு ஆகும்.
கடவுள் முயக்கத்தின்
வேகவளர்ச்சி ஆகும்.
கடவுள் உங்கள்
பக்கமாக நெருங்கி வரும்- கடவுளுக்கும் உங்களுக்குமான இடைவெளி குறைப்பு ஆகும்.
காப்பு மந்திரம் ஓதி தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்க, ஐந்திணைக் கோயில், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் வாழ்த்துகிறது.
இந்தக் காப்பு
மந்திரத்தில் சொல்லப்பட்டுள்ள அத்தனை செய்திகளுக்கும், ஏன்? எதற்கு? எப்படி? என்கிற
தெளிவான விளக்கங்களும் கற்றுத் தரப்படுகிறது, மந்திரம் கோயில் முன்னெடுக்கும் உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பில்.
மந்திரம் கோயில் முன்னெடுக்கும் உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பில் இணைய விரும்பினால், இணைப்பில் சென்று, முழுமையாகப் புரிந்து கொண்டு, உறுதியான முன்னேற்றத்திற்கான மந்திரம் படிப்பில் இணையலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக